பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே உண்மையான போர்க் குற்றவாளிகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பூகோள வெப்படைதல் காரணமாக அனைத்து தாவர, விலங்கு இனங்களும் அழிவடையலாம். உண்மையான போர்க் குற்றவாளிகளும் மனித உரிமைகளை மீறியவர்களும் பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே என ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்விதிகளை மீறுபவையாக மேற்குலக நாடுகள் உள்ளன என கண்டியில் நடைபெற்ற புவி மணித்தியால நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்தார்.
புள்ளிவிபரங்களின்படி, பூகோள வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.