இலங்கை பால் உற்பத்தி அபிவிருத்திக்கென பசு மாடுகளை உருவாக்க அவுஸ்திரேலியாவில் இருந்து காளை மாடுகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதல்கட்டமாக அவுஸ்திரேலியாவின் ஜேர்சி வர்க்க காளைகள் 8 இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகள் விமானத்தில் முதல் வகுப்பில் வைத்து குறித்த 8 காளைகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இந்த முயற்சி குறித்து தாம் புதுமை அடைவதாக தாஸ்மேனிய ஜேர்சி வல்லுநர் ஜியோக் ஹீஸ்லேவூட் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் காளைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டம் வெற்றியளித்தால் எதிர்காலத்தில் 2000 - 2500 இளம் பசுமாடுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.