பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீள் எழுச்சித் திட்டத்தின் ஊடாக வட மாகாண அபிவிருத்திக்கு என 1000 கோடி ரூபா வழங்கப்படவுள்ளது.
இந் நிதியினூடாக வட மாகாணத்தில் உள்ள பின்
தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளைக் கேட்டறிந்து
அவற்றினை நிவர்த்தி செய்யும் முகமாக மக்களிடம் வழங்கப்படவுள்ளது. அத்துடன்
சிறு வீதிகள் புனரமைப்பு, கடற்றொழில், வாழ்வாதார உதவிகள், நன்னீர்
மீன்பிடி, மீள் குடியேற்றம் என்பவற்றையும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
மக்களது தேவைகளை அரச நிறுவனங்கள் ஊடாக
பெற்று அரச அதிகாரிகள் அதனை மீழாய்வு செய்ய வேண்டும். இம் மீளாய்வினை
இரண்டு மாத காலப்பகுதிக்குள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு அறிக்கையாக
சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இந்நிதியானது கையளிக்கப்படும் எனவும்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஆயிரம் கோடி ரூபா துரித மீள்
எழுச்சித்திட்ட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே
இவ் திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.