பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக டேவ் வட்மோர் அடுத்தமாதம்
பொறுப்பேற்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரானது வட்மோரின்
பயிற்சியின்கீழ் பாகிஸ்தான் அணி விளையாடும் முதலாவது சுற்றுப்போட்டியாக
அமையும்.
டேவ் வட்மோரும் களத்தடுப்பு பயிற்றுநர் ஜூலியன் பௌண்டெய்னும் தமது
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு வருவர் என
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரியொருர் ராய்ட்டர்ஸிடம்
தெரிவித்து;ளளார்.
எனினும் இதுதொடர்பாக தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்
இந்திகாப் அலாம் தலைமையிலான குழு தீர்மானம் மெற்கொள்ளும் எனவும் பாகிஸ்தான்
கிரிக்கெட் சபையின் தலைவர் ஸகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோர், 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி
உலகக்கிண்ணத்தை வென்றபோது அவ்வணியின் பயிற்றுநராக விளங்கினார். அதன்பின்
1999 ஆம் ஆண்டு முதல் இரண்டாவது தடவையாகவும் இலங்கை அணியின் பயிற்றுநராக
கடமையாற்றிய அவர் 2003 முதல் 2007 வரை பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக
கடமையாற்றினார்.