சோமாலிய கடற் கொள்ளையர்களின் பிடியில்
உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்பிடி
மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தாம்
கோரியுள்ள கப்பப் பணத்தை வழங்காவிட்டால் மீனவர்களை கொலை செய்யப்போவதாக
சோமாலிய கடற் கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கென அவர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கியிருந்தனர்.
மூன்றாம் தரப்பின் உதவியைப் பெற்று மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


