
இந்தியாவின் மேற்கு பக்கம் வீசும் காற்று இலங்கையின் தெற்கு பக்கம் வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சூரியகுமார் அத தெரணவிடம் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் கரையோரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மழை பெய்யும் சமயத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் காற்றின் வேகம் கடலின் தெற்மேற்கு திசையில் 10 கிலோ மீற்றர் தொடக்கம் 30 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழை வீழ்ச்சியின் விபரம் வருமாறு:
இரத்மலானை - 93.8 மில்லி மீற்றர்
கொழும்பு - 70.3 மில்லி மீற்றர்
இரத்தினபுரி - 66.7 மில்லி மீற்றர்
கட்டுநாயக்க - 41.3 மில்லி மீற்றர்
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான வெப்பநிலையின் விபரம் வருமாறு:
ஆகக்கூடுதலாக வவுனியாவில் 34.9 செல்சியஸ்
ஆகக்குறைவாக நுவரெலியாவில் 13.7 செல்சியஸ்