வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்பு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதியரசர்களின் பெயர்களை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விரைவில் அறிவிக்க உள்ளார்.
5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க உள்ளது. பொன்சேக்கா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சாட்சியங்கள் அடங்கிய முழுமையான வழக்கு ஆவணங்களை மேல் நீதிமன்ற பதிவாளர், உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று அனுப்பி வைத்தார்.
சட்டமா அதிபரினால் பொன்சேக்காவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில், இரண்டு பேர் தீர்மானித்தனர். ஒரு நீதிபதி, சரத் பொன்சேக்கா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என தீரப்பளித்திருந்தார்.