ரஷ்ய ஜனாதிபதி ஆசனம் மீண்டும் விலாடிமீர் புடின் வசம்

ரஷ்ய ஜனாதிபதி ஆசனம் மீண்டும் விலாடிமீர் புடின் வசம்

ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதன் முன்னாள் பிரதமர் விலாடிமீர் புட்டின் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

ரஷ்யாவில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஜனாதிபதித் தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதமராக இருந்த விலாடிமீர் புடின் இந்தத் தேர்தல் மூலம் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாகும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரண்டு தவணைகள் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்த விலாடிமீர் புடின் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாவதற்கு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நான்கு பேரை எதிர்த்து விலாடிமீர் புடின் போட்டியிடுகின்றார். இவர்களில் மூவர் முன்னைய தேர்தல்களில் புடினால் தோற்கடிக்கப்பட்டவர்கள்.

புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி கடந்த பாராடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த பரவலான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

மாஸ்கோவில், மனைவியுடன் வாக்களித்த புடின், இந்தத் தேர்தலில் அதிகளவானோர் வாக்களிப்பார்கள் என்றும் மக்கள் பொறுப்புடன் செயற்படுவாடுகள் என்றும் நம்புவதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now