இந்திய
அணித்தலைவர் டோனியும், அதிரடி வீரர் விரேந்திர ஷேவாக்கும் தங்களுக்கு
மத்தியில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொண்டதாக சௌரவ் கங்குலி
தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில்
நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் இந்திய அணியின் மூத்த
வீரர்களை சுழற்சி முறையில் களமிறக்கியதனால் அணித்தலைவர் மஹேந்திர சிங்
டோனிக்கும், மூத்த வீரர் வீரேந்திர ஷேவக்கிற்கும் இடையே கருத்து மோதல்
ஏற்பட்டது.
இது குறித்து கங்குலி, டோனி-ஷேவக் இருவருக்கும் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தற்போது இல்லை என தெரிவித்தார்.
இந்த விடயத்தை சேவாக், தன்னிடம் தெரிவித்ததாக கொல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் கூறினார்.
ஆனாலும்,
அணித்தலைவர் டோனி சில வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை என்றும் நிலையான
ஒரு அணியையே விரும்புவதாக கூறப்படுவது குறித்த வினாவை ஊடகத்தினர்
கங்கூலியிடம் கேட்டனர்.
இதற்கு
பதிலளித்த கங்குலி, ஒவ்வொரு அணித்தலைவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள்,
எந்த ஒரு அணித்தலைவரும் எல்லாவற்றிலும் சரியானவராக இருக்க முடியாது.
இந்த
அணி வெற்றிகளைப் பெற்றுத் தரும் என்று டோனி நம்பிக்கை கொண்டிருக்கலாம்.
ஆனால், எந்த ஒரு அணித்தலைவரும் அணி தோற்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை
என்று கூறினார்.
மேலும்,
அவர் கூறுகையில், ஐ.பி.எல் போட்டிகளில் பங்கு பெறும் அணியான வங்கதேச
அணியில் தற்போது மனோஜ் திவாரி, ரித்திமான் சாஹா, அஷோக் டிண்டா ஆகிய 3
சிறந்த வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர மொகமட் சமியும் உள்ளார் என்றும்
கங்குலி தெரிவி்த்தார்.