தாய்லாந்து பெண் ஒருவரை பலாத்காரமாக முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முயற்சித்த சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புறக்கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஜே.ஆர்.நிஷாந்த என்ற சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டியில் இருந்து துறைமுகப்பகுதிக்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த தாய்லாந்து நாட்டு பெண்ணை வேறு வழியில் கடத்த இவர் முயற்சித்துள்ளார்.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதியுடைய கழுத்தை பிடித்து தாய்லாந்து பெண் நசுக்கவே, முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் சாரதி நிறுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
இக்கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி சந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்ற தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு உட்படுத்த முடியாதவை என்பதால் இந்த செய்திக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். நன்றி.