விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியும் என்றநம்பிக்கைக்கு
மருத்துவ ரீதியாகவோ அல்லது மரபணு விஞ்ஞான ரீதியாகவோ அடிப்படை ஏதும் இல்லை
என்று சென்னை செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின்
செயற்கை கருத்தரிப்பு மருந்தியல்துறை தலைவருமான டாக்டர் என்.பாண்டியனிடம்
தெரிவித்துள்ளார்.
நுண்ணறிவுத் திறன் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்கு விந்தணுமூலம்
மாறுகிறது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது என்றும் ஐஐடித் துறைச் சார்ந்தவர்கள்
திறமையானவர்கள், மற்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்று கருதுவது தவறான
அபிப்பிராயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சொந்த முயற்சி, சூழல் மற்றும் அனுபவங்கள் மூலம் மட்டுமே நுண்ணறிவுத்
திறமையாளர்கள் உருவாவார்கள் என்பதற்கான ஆதரங்களே உள்ளதாகவும் டாக்டர்
என்.பாண்டியன் கூறினார்.
Source: BBC