இந்தியாவில்
அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பதாக அமெரிக்க பசுபிக் கட்டளைப்
பீடத்தின் தலைவரான அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் தெரிவித்ததை இந்திய
வெளிவிவகார அமைச்சும் மறுத்துள்ளது.
லக்ஷர் -ஈ -தொய்பா போன்ற அமைப்புகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் அமெரிக்க
சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட்,
அமெரிக்க நாடளுமன்ற விசாரணையொன்றின்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற
கூட்டுப்பயிற்சிகளின்போது மாத்திரமே அமெரிக்க துருப்புகளுடன் இந்தியா
இணைந்துசெயற்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க துருப்புகள் கடந்த காலத்திலோ தற்போதோ இந்தியாவில் நிலைகொள்ளவில்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.