சிறைச்சாலை
கைதிகளிடையே ஓரினச் சேர்க்கை அதிகரித்துவருவது
அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எயிட்ஸ் மற்றும் ஏனைய பால்விணை நோய்கள்
பரவும் அச்சம் அதிகரித்துள்ளாகவும் சுகாதார அதிகாரியொருவர்
தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில்
உரையாற்றுகையில், தேசிய எயிட்ஸ் மற்றும் பாலியல் மூலம் பரவும் நோய்கள்
தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நிமல் எதிரசிங்க இதைத்
தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள், சுற்றுலா விடுதி உரிமையாளர்க், தொண்டர் நிறுவன அங்தக்தவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எயிட்ஸ் தொற்றை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்படுவதன் மூலம் அதை பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
'எயிட்ஸ் வைரஸானது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கும் பெண்களிடமிருந்து
பெண்களும் பரவக்கூடும். இலங்கையில் சுமார் 3000 பேர் எயிட்ஸ் தொற்றுடன்
உள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த வரும் 1463 பேருக்கு எயிட்ஸ் இருப்பது
உறுதிப்படுத்தப்பட்டது' என டாக்டர் எதிரிசிங்க கூறினார்.
இதுவரை 253 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுமார் 50
பேர் சிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் 15-49
வயதுக்குட்பட்டோர் ஆவார். இவர்களில் 58 சதவீதமானோர் ஆண்கள், 42
சதவீதமானோர் பெண்கள்.
மேல் மாகாணத்தில் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. தனியார் இரத்தவங்கிகள் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்' என அவர் கூறினார்.