இந்திய
அணியின் சுவர் என அழைக்கப்படும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ராகுல்
ட்ராவிட் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக
தெரியவருகிறது. நாளைய தினம் பெங்களூரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக்
கூட்டியுள்ள ராகுல் ட்ராவிட், அச்சந்திப்பில் தனது ஓய்வை அறிவிப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவுக்குத் திறமையை வெளிப்படுத்தியிருக்காத ராகுல் ட்ராவிட், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் தொடருக்கு ஏராளமான நாட்கள் காணப்படுகின்ற நிலையில் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளார். நாளைய தினம் மதியம் 12.30 இற்கு ராகுல் ட்ராவிட் தனது ஓய்வை அறிவிப்பார் என தெரியவருகிறது. நாளைய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத்தலைவர் ஸ்ரீனிவாசனும் கலந்துகொள்ளவுள்ளார்.
39 வயதான ராகுல் ட்ராவிட் இந்தியா சார்பாக 164 டெஸ்ட் போட்டிகளிலும், 344 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், ஒரு டுவென்டி டுவென்டி போட்டியிலும் பங்குபற்றியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள், 63 அரைச்சதங்கள் உட்பட 52.31 என்ற சராசரியில் ராகுல் ட்ராவிட் 13,288 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 39.16 என்ற சராசரியில் 12 சதங்கள், 83 அரைச்சதங்களோடு அவர் 10,889 ஓட்டங்களைக் குவித்துள்ளார்