அவுஸ்திரேலிய
அணியின் டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் மைக்கல்
கிளார்க் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு வந்தபடி சௌரவ் கங்குலி தலைமையிலான பூனே
வொறியர்ஸ் அணி சார்பாக போட்டிகளில் பங்குபற்ற அவர் ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபெறுவதைத் தவிர்த்து வந்த மைக்கல் கிளார்க், இம்முறை ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபெறத் தீர்மானித்துள்ளதன் காரணமாக தனது ஐ.பி.எல். அறிமுகத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். இதுவரை காலமும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தேவையான ஓய்வைப் பெற்றுக் கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டிகளை அவர் தவிர்த்து வந்திருந்தார்.
மைக்கல் கிளார்க்கை பூனே வொறியர்ஸ் அணி சார்பாக ஒப்பந்தம் செய்ததையடுத்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ள பூனே வொறியர்ஸ் அணியின் உரிமையாளர்கள், அவரது கிரிக்கெட் அறிவும், அணியில் அவரது இருப்பும் பூனே வொறியர்ஸ் அணியை வளப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
பூனே வொறியர்ஸின் பிரதான வீரரான யுவ்ராஜ் சிங் புற்றுநோய்ச் சிகிச்சை காரணமாக இப்பருவகாலத்தில் பங்குபற்றமுடியாது போனதுடன், பூனே வொறியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்த அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் காயம் காரணமாக இப்பருவகாலத்தில் பங்குபெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது