பங்களாதேஷில்
இடம்பெறவுள்ள ஆசியக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை கிரிக்கெட்
அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரால்
அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் தலைவராக மஹேல
ஜெயவர்தனவும், உப அணித்தலைவராக அன்ஜலோ மத்தியூஸும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் சீ.பி. கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட வீரர்களில் ரங்கன ஹேரத், சானக வெலகெதர, திலான் சமரவீர மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் ஆசியக்கிண்ணப் போட்டிகளுக்கான அணியில் இணைக்கப்படாத அதேவேளை, சீ.பி. கிண்ணப் போட்டிகளுக்காக இணைக்கப்பட்டிராத சுழற்பந்து வீச்சாளர் சீக்குகே பிரசன்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரங்கன ஹேரத் சீ.பி. கிண்ணப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி வரும் நிலையில் அவருக்கான இடம் வழக்கப்படாது விடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் சிறப்பாகச் செயற்பட்டும் சீ.பி. கிண்ணத் தொடரில் இணைக்கப்படாதிருந்த சீக்குகே பிரசன்னவிற்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இடம்பெறவுள்ள ஆசியக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை, இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றவுள்ளன. இத்தொடரின் முதலாவது போட்டி மார்ச் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் நடப்பு ஆசியக்கிண்ணச் சம்பியனான இந்திய அணியை எதிர்த்து மார்ச் 13ஆம் திகதி மோதவுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள முழுமையான 14 பேர் கொண்ட இலங்கை அணி:
மஹேல ஜெயவர்தன, அன்ஜலோ மத்தியூஸ், குமார் சங்கக்கார, திலகரட்ண டில்ஷான், டினேஷ் சந்திமால், லகிரு திரிமன்ன, நுவான் குலசேகர, பர்வீஸ் மஹரூப், திஸ்ஸர பெரேரா, சச்சித்திர சேனநாயக்க, உபுல் தரங்க, லசித் மலிங்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுரங்க லக்மால்.