எரிமலை போன்ற வாழ்க்கை செலவை ஜெனீவா தண்ணீரால் அணைக்க அரசு முயற்சிக்கிறது:ரணில்

வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய பொது ஆர்ப்பாட்டம் நேற்று  வியாழக்கிழமை கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் இடம்பெற்றது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்;ன, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, கயன்ந்த கருணாதிலக்க, ரவி கருணாநயக்க, லக்ஷ்மன் கிரியல்ல, எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த எதிர்க்;கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க,

"ஜெனீவாவின் தீர்மானம் அரசாங்கத்தின் பிரச்சினை, வாழ்க்கை செலவு எமது வீட்டின் பிரச்சினை எனவே தான் நாங்கள் வாழ்க்கை செலவை குறைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். இந்த அரசாங்கத்தில் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் இல்லாவிட்டாலும் நண்;பர்களுக்கு போதிய அளவு நிவாரணங்கள் உண்டு.

எரிமலை போன்ற வாழ்க்கை செலவை ஜெனீவா தண்ணீரால் அணைக்க அரசு முயற்;சிக்கிறது. நாங்கள் இந்த சாட்டுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வராவிட்டால் அடுத்த மே மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன்,

"அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்றுவதாக சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்துவிட்டு, நிறைவேற்ற முடியாமல் போனதற்கு காரணம் இன்று நாட்டில் பலர் ஜனாதிபதியாக இருப்பதாகும்.

அவர்களில் ஒருவர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றவர் விமல் வீரவன்ச, இன்னுமொருவர் சம்பிக்க ரணவக்க ஆகியோராவார். இதனால் உள்ளூரில் ஒன்ரை சொல்கின்றார்;கள். அதேவேளை வெளிநாட்டில் வேறொன்றை சொல்கின்றார்கள்.

தொண்டமான் இன்று அமைச்சரா அல்லது நாடாளுமன்ற உறுப்பினரா என்று தெரியாமல் பெருந்தோட்ட பகுதி மக்கள் திண்டாடுகின்றனர். தனக்கு வாக்களித்த மக்களது பிரச்சினைக்கன்றி சொந்த பிரச்சினைக்கு போராடும் ஒரு நாடகமாகவே இது திகழ்கிறது" என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now