இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு, உரிமை என்பவற்றை உறுதிப்படுத்துவது
தொடர்பில் குவைத் நாட்டுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட
இலங்கை தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
குவைத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 75% பெண்களாவர்.
இலங்கை அரசாங்கம் கட்டார், பஹரேன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே இலங்கை பணியாளர்கள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஈராக்கில் அதிக வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அந்நாட்டுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இலங்கை தீர்மானித்துள்ளது.
ஈராக் அதிக பணியாளர்களை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.