ஹைகோப் நிதி மோசடி வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை முற்றாக விடுவித்து கொழும்பு மேல் இன்று (15) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹெகோப் வழக்கில் மேல் நீதிமன்றில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இராணுவ நீதிமன்ற குற்றச்சாட்டுக்களோடு ஒத்துப்போவதாக தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் தீர்ப்பினை வழங்கினார்.
இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஹைகோப் வழக்கு தேவையற்றது என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனால் ஒரே குற்றத்திற்கு இரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்க முடியாது என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி சுனில் ராஜபக்ஷ், ஹைகோப் வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை விடுவித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு உட்படுத்த முடியாதவை என்பதால் இந்த செய்திக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். நன்றி.