இலங்கையின் சனத்தொகை 2 கோடிக்கும் அதிகம்: புதிய சனத்தொகை கணிப்பீடு!



இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நாடு முழுவதும் கடந்த 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது.
2001ஆம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.
எவ்வாறாயினும், மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் ஒருகோடியே 78 லட்சமாக சனத்தொகை காணப்பட்டது.
எனினும், தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில், இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now