யுத்த காலத்தில் காணாமற்போர் தொடர்பான 2ஆம் கட்ட விசாரணை ஆரம்பம்

2006 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமற்போனக் கூறப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர்களது மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 2006ஆம், 2007ஆம், 2008ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அந்தக் காலப் பகுதிகளில், காணாமற் போனவர்களது உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் 2007, 2008, 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எம்மிடம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இவர்களின் உறவினர்களை அழைத்து இரண்டாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்.

2006 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போதுதான் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றோம். முறைப்பாடுகளில் காணப்படுகின்ற ஆவணக்குறைபாடுகளைச் சீர்செய்வதுடன், பொலிஸ் முறைப்பாடு தொடர்பிலும் ஆவணங்களைப் பெற்று வருகின்றோம்.

இந்த விசாரணைகள் ஒரு வார காலத்துக்கு எமது அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. இதன் பின்னர் கொழும்பிலிருந்து எமது தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now