இலங்கையில் இரண்டு கோடிக்கும் அதிகமான
தொலைபேசி இணைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டின் நிறைவில் இலங்கையின் மொத்த தொலைபேசி
இணைப்புக்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே பத்தொன்பது லட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டில் செல்லிடப் பேசி பாவனையாளர்களின் எண்ணிக்கை 17.3 மில்லியனாகக் காணப்பட்டதாகவும் 2011ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18.3 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.
வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் செல்லிடப் பேசி
பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.