இலங்கையில் 3000 ற்கும் அதிகமானோர் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்கள் பட்டியலில் தினமும் ஒரு நோயாளி புதிதாக இணைவதாக வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் எயிட்ஸ் தொடர்பாக இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்த கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எயிட்ஸ் தடுப்பு பிரிவுத் தலைவர் வைத்தியர் நிமல் எதிரி சிங்கவால் இதனை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வருடம் இலங்கையில் 150 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுடன் பிறந்துள்ளனர்.
இனங்காணப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளில் 61 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக இவ் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இதற்கு தவறான உடலுறவு மற்றும் தவறான குருதிப்பரிமாற்றம் ஆகியனவே எச்.ஐ.வி. நோயினை பரவச் செய்கிறது. கருத்தரித்த தாய்மார்களுக்கு இந் நோய் ஏற்படுமாயின் அது குழந்தைக்கும் பரவும். இது குறித்து ராகம வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஜயதாதரி ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்; கடந்த வருடத்தில் ராகம வைத்தியசாலையில் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ் வருடத்தின் இரு மாதங்களுக்குள் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். என குறிப்பிடப்பட்டுள்ளது.
|
இலங்கையில் எச்.ஐ.வியினால் 3000 ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Labels:
இலங்கை