ஐந்தாவது
ஐ.பி.எல் தொடரில் புனே, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
மேலும்,
பெங்களுர் அணி முந்தைய போட்டியில் ராஜஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கும்
பதிலடி கொடுத்தது. இம்முறை தனது சொந்த ஊரான ஜெய்ப்பூரில் ஏற்கனவே பஞ்சாப்,
கோல்கட்டா, டெக்கானை வீழ்த்திய ராஜஸ்தான் அணி நேற்று முதல் தோல்வியை பதிவு
செய்தது.
பெங்களூரு
அணியின் ஆப் டிவில்லியர்ஸ் 21 பந்தில் 50 ஓட்டங்களை எட்டினார். இதன் மூலம்
இத்தொடரில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரரானார். முதல் இடத்தில்
ராஜஸ்தான் அணியின் ஓவைஸ் ஷா உள்ளார்.
நேற்றைய போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட பெங்களுர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால், டிவில்லியர்ஸ் இவ்விருதை நான்கு விக்கெட் வீழ்த்திய சக வீரர் அப்பன்னாவிடம் வழங்கி மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.