ஏமன் நாட்டு இராணுவத்தினருக்கும் - அல் கைதாவினருக்கும் இடையில்
நடைபெற்று வரும் தீவிர மோதலில் கடந்த 5 நாட்களில் 222 பேர்
பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏமனின் தெற்கு பகுதியில் உள்ள லோடர் எனும் நகரை கைப்பற்றும் முகமாக அல்
கைதா இயக்கத்தினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருவதுடன், இதை எதிர்த்து
ஏமன் நாட்டு காவற்துறையினரும், துணை இராணுவத்தினரும் கடுமையான பதில்
தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் போது கடந்த 5 நாட்களில் 180
க்கு மேற்பட்ட தலிபான்களும், 24 பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பதாக யேமன்
நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை அந்நாட்டின் அட் தாலி மாகாணத்தில் உள்ள அரச கட்டிடங்களை தகர்ப்பதற்கு அல் கைதாவினர் திட்டமிட்டுள்ளதாக ஏமனிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யேமனியில் மக்கள் போராட்டம் வலுப்பெற்றதை தொடர்ந்து அங்கு நீண்டகாலமாக ஆட்சி நடத்தி வந்த அலி அப்துல்லா சாலேஹ்வுக்கு நெருக்கடி ஏற்பட்டதுடன், தேர்தல் மூலம் துணைப்பிரதமரான அப்து ராபோ மான்சூர் ஹாதியிடம் பதவி கைமாறப்பட்டது. அவர் அதிபராக பதவியேற்றதும், தமது அடுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேச நலன் கருதி அல் கைதாவினருக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை தொடரப்போவதாக அறிவித்திருந்தார். எனினும் அடுத்து சில மாதங்களுக்குள் அங்கு அல் கைதாவினரின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், யேமனியில் உள்ள சவுதி அரேபிய தூதரகமும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடபட்டுள்ளது.