உலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரும் சுகாதார வல்லுனருமான
டாக்டர் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim) தெரிவாகியுள்ளார். இவர் தற்போது
தார்ட்மவுத் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
எதிர்வரும் ஜூலை 1ம் திகதி முதல் உலக வங்கியின் தலைவராக செயற்படவுள்ள
டாக்டர் ஜிம் யோங் கிம் ஐந்து வருடங்களுக்கு இப்பதவியில் நீடிக்கவுள்ளார்.
நைஜீரிய நிதியமைச்சர் நிஜோஷி ஓகொஞ்சோ-ல்வெலா இப்பதவிக்கு இறுதிவரை
போட்டியிட்ட போதும் அமெரிக்க பிரதிநிதி ஒருவரே உலக வங்கியின் தலைவராக
நியமிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஏற்ப ஜிங் யோங் கிம்
தெரிவாகியுள்ளார்.
52 வயட்ஹான ஜிம் ஜோங் கிம், எச்.ஐ.வி தொடர்பான மருத்துவ ஆய்வுகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றதுடன், வளரும் நாடுகளில் காசநோய் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் ஆவார்.
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு ஜிம் யோங் கிம் மிக பொருத்தமானவர் என அமெரிக்க நிதி அமைச்சகத்தின் செயலாளர் திமொதி கெயித்னெர் தெரிவித்துள்ளார்.