
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷான் சொயிசா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வேறு நபர்களுடைய கணக்கில் நுழைந்து முறைகேடுகளை செய்வது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் சிலரது பெயர் மற்றும் புகைப்படங்களை களவாடி பேஸ்புக் கணக்கு ஒன்றை உருவாக்கி முறைக்கேடான செயல்களில் ஈடுபடுவது குறித்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முறைப்பாடுகளை அடுத்து பல பேஸ்புக் கணக்குகளை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லக்ஷான் சொயிசா கூறியுள்ளார்.