இந்திய
அணியின் உடையே சாதிக்க தூண்டுகிறது. இதை அணிந்ததும் சிறப்பாக விளையாட
வேண்டும் என்ற பொறுப்பு வந்துவிடும் என்று இந்திய அணியின் இளம் வீரர்
வீராட் கோஹ்லி தெரிவித்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
ஹம்பாந்தோட்டையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில்
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 12வது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு
செய்தார் இந்திய அணியின் இளம் வீரர் வீராட் கோஹ்லி. இதன்மூலம் ஆட்டநாயகன்
விருதையும் தட்டிச் சென்றார்.
இதுகுறித்து
கோஹ்லி கூறியதாவது, இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சதம்
அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்துவதற்கு, இந்திய அணியின் உடை தான் முக்கிய காரணம்.
இதனை
அணிந்து விளையாடுவதன்மூலம், போட்டியில் சாதிக்க ஊக்கமளிக்கிறது. தவிர,
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கூடுதல் பொறுப்புணர்வை
ஏற்படுத்துகிறது.
ஹம்பாந்தோட்டையில்
உள்ள மைதானத்தில் முன்னதாக விளையாடிய அனுபவம் இல்லாததால், களத்தடுப்பில்
சில தவறுகளை செய்தோம் என்றும் பின்பு உடனடியாக திருத்திக் கொண்டதால்,
இலங்கையின் ஓட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர்
தெரிவித்தார்.