யாழ். மாவட்டத்தில் 52 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக்கு உட்பட்ட நிலையில்
உள்ளனர் என யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு உற்பத்தித்திறன் மேம்படுத்தல் பயிற்சி நெறி யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயம், மீன்படி இம்மக்களின் முக்கிய தொழிலாக இருந்து வருகின்றது. கடந்தகால போர்ச்சூழல் இம்மக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மீன்படி, விவசாயம் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்க வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ். மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு 58 ஆயிரம் மில்லியன் ருபா செலவிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைச்சுக்களின் நிதியுதவியுடனும் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இருந்தும் 52 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இவர்களை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு உண்டு என குறிப்பிட்டார்.