மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரணவிற்கு கிடைத்த தகவலையடுத்து, நாம் களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்கவிடம் வினவியபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு வயிறு பகுதியில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனில் ஜயசிங்க அத தெரணவிடம் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அத தெரண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் வினவியபோது, சம்பவத்தை உறுதி செய்த அவர், ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.