ஐந்தாவது
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்,
மற்ற வீரர்களை விட சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார்கள்.
கிறிஸ் கெய்ல் (பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ்) ரூ.3.25 கோடி
கடந்த
ஐ.பி.எல். போட்டியை போலவே இந்த ஐ.பி.எல். போட்டியிலும் கெய்ல் அதிரடியாக
விளையாடி வருகிறார். புனே அணிக்கெதிரான கடந்த போட்டியிலும் 48 பந்தில் 81
ஓட்டங்களும், சென்னைக்கெதிராக சேப்பாக்கம் மைதானத்தில் 35 பந்துகளில் 68
ஓட்டங்களும் எடுத்தார்.
ஜமைக்காவை
சேர்ந்த 32 வயதான அவர் 4 ஆட்டத்தில் விளையாடி 159 ஓட்டங்கள்
எடுத்துள்ளார். இதில் 6 பவுண்டரிகளும், 15 சிக்சர்களும் அடங்கும். கடந்த
ஆண்டு பெங்களூர் அணிக்கு கெய்ல் ஒப்பந்தம் ஆனார். அவரை அந்த அணி தொடர்ந்து
தக்க வைத்தது.
கீரான் பொல்லார்ட் (மும்பை இண்டியன்ஸ்) ரூ.4.50 கோடி
சிறந்த
பன்முக ஆட்டக்காரரான பொல்லார்ட் 4 ஆட்டத்தில் விளையாடி 97
ஓட்டங்கள் எடுத்துள்ளார். ராஜஸ்தானுக்கெதிராக துடுப்பாட்டத்திலும் (64)
பந்து வீச்சிலும் (4 விக்கெட்) முத்திரை பதித்தார். அவர் மொத்தம் 9
விக்கெட்டுகள் கைப்பற்றி 4வது இடத்தில் உள்ளார்.
டிவைன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ. 1 கோடி
டெக்கான்
சார்ஜர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தனது அதிரடி மூலம் வெற்றியை பெற்று
கொடுத்தார். 5 ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
சுனில் நரைன் (கொல்கத்தா) ரூ. 3.50 கோடி
முதல்
முறையாக விளையாடும் நரைன் கொடுத்த விலைக்கு ஏற்ற வகையில் அவர் பந்து
வீச்சில் முத்திரை பதித்து வருகிறார். 3 ஆட்டத்தில் 6 விக்கெட்
எடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கெதிராக 19 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்
கைப்பற்றினார்.
கெவின் கூப்பர் (ராஸ்தான் றொயல்ஸ்) ரூ. 25 லட்சம்
முதல்
முறையாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார். ராஜஸ்தான் அணி தொடக்கத்தில்
பெற்ற 2 வெற்றிக்கு இவரது பந்து வீச்சு காரணமாக இருந்தது. 3 ஆட்டங்களில்
விளையாடி 8 விக்கெட் கைப்பற்றியுள்ளார். துடுப்பாட்டத்திலும் அதிரடியாகவும்
விளையாடக்கூடியவர்.
மர்லோன் சாமுவேல்ஸ் (புனே வாரியர்ஸ்) ரூ. 50 லட்சம்
இந்த
ஐ.பி.எல். போட்டியில் தான் அறிமுகம் ஆனார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான
சாமுவேல்ஸ் 5 ஆட்டத்தில் 94 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 104.44
ஆகும். 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.