எதிர்வரும் மே 7ம் திகதி அனைத்து தனியார், பெருநிறுவனம் மற்றும் வணிக துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு தொழில் அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.
5ம் திகதி வெசாக் தினம் என்பதால் அதற்கு அடுத்த நாளான 6ம் திகதியும் விடுமுறை அந்த வரிசையில் 7ம் திகதியையும் அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையை தனியார் துறைக்கும் வழங்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அத தெரண)