தம்புள்ளை பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன்
எதிரொலியாக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை
மாவட்டங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.
யாழில் பெருமெடுப்பில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சகல ஜூ ம் ஆப் பள்ளிவாசல்களிற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதற்கான ஏற்பபாடுகளை கிண்ணியா ஜம் இய்யத்துல் உலாமா சபையினரும், மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்தன.