
களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அண்மைக்காலத்தில் தான் அமைதியாக இருந்தாலும் இப்போது மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.
'கடந்த சில வாரங்களாக நான் நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் கதவை திறந்துவைத்திருந்தேன். சிலர் அந்த கதவுகளுக்கூடாக வெளியே செல்ல பெரும் எண்ணிக்கையானோர் உள்ளே வந்தனர். இப்போது வேறு யாரையும் நான் சேர்க்க முடியாது. இது ஹவுஸ்புல்லாகி விட்டது. எவரேனும் வர விரும்பினால் வெளியே காத்திருக்க வேண்டும்' என அவர் கூறினார்.
ஜனாதிபதி மாத்திரமே களனி அமைப்பளார் பதவியிலிருந்து மேர்வின் சில்வாவை நீக்கமுடியும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியமை குறித்து, கருத்துத் தெரிவிக்கையில், தனக்கு அதைவிட நற்சாட்சிப் பத்திரம் தேவையில்லை என்றார்.
'கிருவபத்துவ காலத்திலிருந்து அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எனது நீண்டகால நண்பர். பெலியத்த தொகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிரந்தர வெற்றிக்காக நான் பணியாற்றியுள்ளேன்' என அவர் கூறினார்.