அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அடுத்த மாதம் தொடக்கம் வாகனங்கள்
இறக்கப்படவுள்ளதால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலைகள் கணிசமாக குறையும்
என துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் ரோஹித அபயகுணவர்தன
கூறினார்.
சர்வதேச கடற்பாதை அம்பாந்தோட்டையிலிருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. இதனால், கடற்பாதையிலிருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பொருட்களை கொண்டுசெல்ல மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.
ஆனால், சர்வதேச கடற்பாதையிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டுசெல்ல ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இதனால் கப்பல் கூலிகள் 60 சதவீதமளவில் குறைய வாகனங்களின் விலையும் குறையும் என பிரதி அமைச்சர் கூறினார்.
இதேசமயம், வாகனங்களின் விலைகள் 25 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என வாகன வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இவை வாகனம் காவுவதற்கான விசேட வாகனம் மூலம் உரிய இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
எனவே, இதற்கான மேலதிக செலவினால் வாகனங்களில் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.