தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற
முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன்
தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு
இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் உண்மையில்
விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து,
பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு
முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம்
காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால்,
அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது
கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள
வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உயர்
பீடம் முடிவெடுத்துள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார் .