ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.
மலேசியாவில்,
மே 3-13ம் தேதிகளில் 7வது ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்
நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு அணிகள்
பங்கேற்கின்றன. இந்திய அணி "பி' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, சீனா
அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. "ஏ' பிரிவில் மலேசியா, கொரியா, ஜப்பான்,
ஈரான் அணிகள் உள்ளன.
இந்திய
அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை (மே 4) சந்திக்கிறது. அதன்பின்
பாகிஸ்தான் (மே 6), சீனா (மே 7) அணிகளுடன் மோதுகிறது. இந்திய அணியின்
கேப்டனாக ஆகாஷ்தீப் சிங், துணைக் கேப்டனாக அமித் ரோஹிதாஸ் உள்ளனர்.
முன்னதாக நடந்த இத்தொடரில் இந்திய அணி, இரண்டு முறை (2004, 08) கோப்பை
வென்றது. இம்முறை சாதிக்கும் பட்சத்தில், மூன்றாவது பட்டம் வெல்லலாம்.