
கடந்த இரண்டு வாரத்துக்கு முன் கம்பன் கழகத்திற்கு இலங்கை வந்திருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுடன் மேற்படி விடயமாக ஒரு சந்திப்பும் சிலேவ் ஐலன்ட் உள்ள முஸ்லீம் நூலகத்தில் டாக்டர் தாஸீம் அகமத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அமைச்சர் ரவுப் ஹக்கீம், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுத், பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோரும் பங்கு பற்றினார்கள். இதில் எஸ்.எச்.எம்.ஜெமீல் மருதூர் ஏ மஜீத் உட்பட் 50 க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.
அக் கூட்டத்தின் தீர்மாணத்திற்கு ஏற்ப இலங்கையில் உலக இஸ்லாமிய மாநாட்டை அடுத்த இரு மாதங்களுக்குள் நடாத்துவதற்கான ஆரம்பக் கூட்டமே எதிர்வரும் (28) சனிக்கிழமை நடைபெறுகின்றது.