நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி குற்றவாளி
என்று அந்நாட்டின் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால், பிரதமர் கிலானியை குற்றவாளி உயர்நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
எனினும் சிறை தண்டணை ஏதும் கிலானிக்கு விதிக்கப்படமாட்டாது என்று தெரிகிறது.
அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம் 63 பிரிவின்படி யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க முடியாது.
எனவே கிலானி பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பதிவுசெய்தது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்குகளை மீள ஆராய மறுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி என்ற அடிப்படையில் ஆசிப் அலி ஸர்தாரிக்கு வரப்பிரசாதங்கள் உள்ளதாக யூசுப் ராஸா கிளானி வாதிட்டிருந்தார்.
ஊழல் விடயங்களுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சுவிஸ் வங்கியை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸர்தாரிக்கு எதிரான வழக்கை மீள ஆய்வு செய்யுமாறு கோரி சுவிஸ் வங்கிக்கு கடிதம் ஒன்றை அனுப்பும்படி பாகிஸ்தான் பிரதமருக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றின் இந்த உத்தரவுக்கு கிளானி சம்மதம் தெரிவித்திருந்தபோதும் செயற்படுத்த தவறிவிட்டதாக கிலானி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



