இந்திய
 அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை 
ரிக்கி பொன்டிங்கால் முறியடிக்க வாய்ப்புள்ளது என்று அவுஸ்திரேலியா அணி 
வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
அண்மையில்
 நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை 
(டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 49 சதம்) எடுத்து சச்சின் 
டெண்டுல்கர் உலக சாதனை படைத்தார்.
டெண்டுல்கரின்
 சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்று அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் 
கீப்பரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவருமான ஆடம் கில்கிறிஸ்ட் 
கூறியுள்ளார்.
இது
 தொடர்பாக அவர் மொகாலியில் அளித்த பேட்டியில், சதங்களில் 
டெண்டுல்கருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அவர் 
தலைச்சிறந்த வீரர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அவரது
 உலக சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா? என்பது உண்மையிலேயே சந்தேகம் 
தான். இருப்பினும் சச்சினுக்கு அடுத்தபடியாக ரிக்கிபொன்டிங்கை கூறலாம்.
ரிக்கி
 பொன்டிங் ஒட்டுமொத்தமாக இதுவரை 71 சதங்களே (டெஸ்டில் 41 சதம், ஒரு நாள் 
போட்டியில் 30 சதம்) எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே 29 சதங்கள் 
இடைவெளியுள்ளது.
ஜிம்பாப்வே,
 பங்காளதேஷ் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக டெண்டுல்கர் நிறைய போட்டிகளில் 
விளையாடி சதம் அடித்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள்.
இந்த
 வகையில் வேண்டுமானால் 10 சதங்களை குறைக்கலாம். அப்படி பார்த்தாலும் 
அவருக்கும், பொன்டிங்குக்கும் இடையே 19 சதங்கள் வித்தியாசம் உள்ளது என்று 
குறிப்பிட்டார்.


