இந்திய
மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவியை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக்
கொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முன்னாள் கிரிக்கட் வீரர் சஞ்சய்
மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
சச்சினுக்கு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அவரிடம்
கேட்டபோது, சச்சினுக்கு பதவி கொடுக்கப்படுவதை வரவேற்கிறேன்.
எவ்வித
முன்னறிவிப்பும் இன்றி திடீரென சச்சினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கு சச்சின் ஒப்புதல் தெரிவித்திருப்பது
அதைவிட அதிர்ச்சியாக உள்ளது.
ஓய்வுக்குப் பிறகு அவர் பயிற்சியாளராகவோ, தொழிலதிபராகவோ, சமூக சேவைகளிலோ ஈடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.