தனது
மகன் கடத்தப்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது,
கடத்தலில் ஈடுபட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் கண்டதாக கூறும் பெண்ணின் பெயரை
தருமாறு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
'பெண்ணொருவர் தன்னிடம் (கிரியெல்லவிடம்) வந்து தனது மகனை கடத்திய நபரை பொலிஸ் நிலையத்தில் கண்டதாக தெரிவித்தார் அவர் கூறுகிறார். ஓர் அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அவர் பொதுப்படையாக கருத்துக்களை கூறக்கூடாது. இது ஓர் அவமதிப்பாகும். பெயரை எம்மிடம் தாருங்கள். அப்போது நாம் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்' என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
'பொறுப்புவாய்ந்த ஓர் பிரஜை என்ற வகையில் அவர், மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயரை பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் அதை செய்தாரா? குறைந்தபட்சம் இப்போதாவது அத்தாயின் பெயரை எமக்குத் தருமாறு நான் சவால் விடுகிறேன். அப்போது எம்மால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்' என அவர் தெரிவித்தார்.
'அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு விளையாடுகிறார். 1987-88 இல் அவரின் கட்சி ஆட்சியிலிருந்தபோதுதான் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அதிக எண்ணிக்கையான கொலைகள் இடம்பெற்றன என்பதை நான் நினைவுபடுத்த வேண்டுமா?' எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.