இலங்கைக்கு கடத்தவென தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கிராம் கடல் வெள்ளரிகளை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்தவிருந்து, இந்த மாதத்தில் பிடிபட்ட இரண்டாவது தொகை கடல் வெள்ளரிகள் இவையென்பது குறிப்பிடத்தக்கது.
இராமேஸ்வரம் பகுதியில் வைத்து இந்த கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேவப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான குழு நின்றுகொண்டிருந்ததை அவதானித்த வனவள அதிகாரிகள் அருகில் சென்று அவர்களின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் இருந்து கடல் வெள்ளரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடல் வெள்ளரிகள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்தவை என தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 12ம் திகதி இராமேஸ்வரம் வீட்டில் இருந்து 150 கிலோ கிராம் கடல் வெள்ளரிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடல் வெள்ளரிகளை வைத்திருப்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மருந்து பொருளுக்கு பயன்படுத்தவென ஜப்பான், இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு கடல் வெள்ளரிகள் கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.