அரசியல்வாதிகள் தங்களுடைய வெற்றிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களை
பயன்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்
தற்போதையை பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க குற்றம்
சுமத்தியுள்ளார்.
துபாயில் இடம்பெற்ற சியாம் பாத்தியா விருது விழாவில் கலந்து கொண்டு ´கொல்ப் செய்திச் சேவை´க்கு கருத்து தெரிவித்த போதே அர்ஜுன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
"இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளமையே பிரதான விடயம். ஜனாதிபதி தொடக்கம் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு காணப்படுவது நம்பமுடியாத ஒன்றாகும். எனது கிரிக்கெட் காலத்தில் அரசியல்வாதிகளின் வெற்றிக்கு கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தப்படுவதை நான் அனுமதிக்கவில்லை."
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது கிரிக்கெட் வீரர்களை தனது வெற்றி விளம்பரத்துக்காக பயன்படுத்தினார். தற்போது ஜனாதிபதி, அமைச்சர்கள் என பலர் கிரிக்கெட்டில் தலையீடு செய்கின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் எல்லா விடயங்களிலும் விரல் நுழைக்கிறார். இதுதான் இலங்கையின் கிரிக்கெட்துறை வீழ்ச்சிக்குக் காரணம்." என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ´ஆமாம்´ என தலைசாய்ப்பவர்களே இலங்கை கிரிக்கெட் சபையை நடத்திச் செல்வதாக அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
"நான் கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்தபோது அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அரசியல் விழாவிற்கான நிதியை செலுத்துமாறு கோரினார். நான் அதனை மறுத்துவிட்டேன். சிலர் நாம் செலுத்த வேண்டும் எனக்கூறினர். எனினும் கிரிக்கெட் பணம் கிரிக்கெட்டுக்கே செலுத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் வாதிகளின் சந்தோஷத்துக்கு அல்ல எனவும் நான் கூறினேன்." இவ்வாறு அர்ஜுன குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை வர்த்தகமாக, முதலீடாக நினைப்பவர்கள் இருப்பதனால் கிரிக்கெட் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து செல்வதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.