
சர்வதேச
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை)
பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில்
இந்திய அணி ஏழு இடங்கள் பின்தள்ளப்பட்டு, 165வது இடம் பிடித்தது.
கடந்த
மாதம் நேபாளத்தில் நடந்த ஏ.எப்.சி., சாலஞ்ச் கோப்பை கால்பந்து தொடரின்
அனைத்து லீக் போட்டியிலும் தோல்வி அடைந்ததே பின்னடைவுக்கு காரணம்.
இதன்மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மோசமான ரேங்கிங்கை பெற்றது.
முன்னதாக 2007ல் மார்ச்-மே மாதம் வெளியிட்ட ரேங்கிங்கில் இந்திய அணி 165வது
இடம் பிடித்தது. தவிர, 46 ஆசிய அணிகளில் 32வது இடம் பிடித்தது.
"நடப்பு
உலக சாம்பியன்' ஸ்பெயின் அணி 1442 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்
கொண்டது. ஜெர்மனி (1345 புள்ளி), உருகுவே (1309) அணிகள் தலா ஒரு இடம்
முன்னேறி, "டாப்-3' வரிசையில் உள்ளன.
நெதர்லாந்து
(1207), போர்சுகல் (1190), பிரேசில் (1165), இங்கிலாந்து (1132),
குரோஷியா (1114), டென்மார்க் (1069), அர்ஜென்டினா (1066) ஆகிய அணிகள்
"டாப்-10' வரிசையில் உள்ளன.