
எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ.50 கோடி இழப்பைச் சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த இரு வருடங்களில் மட்டும், பெட்ரோல் விலை குறைந்த பட்சம் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 2011 டிசம்பரில் பெரிய அளவில் பெட்ரோல் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேலும் ரூ. 8 அளவுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட வேண்டும் என்று ஐஓசி தலைவர் அரசை வலியுறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு:
இதனிடையே கமிஷன் தொகை உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளை மூடப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்தியா பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அஜய் பஞ்சால் விடுத்துள்ள அறிக்கையில்,"ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2010 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் முறைப்பாடுகளை கேட்டறிவதற்காக பெட்ரோலியத் துறை அமைச்சக இணைச் செயலர் அபூர்வா சந்திரா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தார்.
டீலர் கமிஷன் தொகையை பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 39 பைசாவும், டீசலுக்கு 17 பைசாவும் உயர்த்த வேண்டும் என்று அக்கமிட்டி பரிந்துரைத்தது.ஆனால் 18 மாதங்களாகியும் அந்த பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22 ம், டீசல் லிட்டருக்கு ரூ. 9 ம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,த்ங்களது கமிஷன் தொகை பெட்ரோலுக்கு 27 பைசாவும், டீசலுக்கு 15 பைசாவும் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது"என்று குறிப்பிட்டுள்ளார்.