தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இலங்கைக்கு மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதற்கமைய நாட்டின் சில பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
கந்தகொட மித்தெனிய வீரவெல ஆகிய நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது மாலைவேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடல் பிராந்தியங்களில் இருந்து கிழக்கு தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆழ்கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.



