போக்குவரத்து
கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் இரு
தினங்களுக்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச
வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர அதிகாரிகளுக்கு 10 நாட்கள்
கால அவகாசம் வழங்கியிருந்ததாக சங்கத்தின் செயலாளர் சந்திக்க எப்பிடகடுவ
தெரிவித்தார்.இன்றுரை 8 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வைத்தியர்களுக்கு தமது அன்றாட கடமைகளை நடத்திச் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து கொடுப்பனவு பிரச்சினை தலை தூக்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
