இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

தமிழ் புத்தகம்
தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள்தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும்.  ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை

சிலிக்கான் ஷெல்ஃப் தளம் புத்தகங்களுக்கான ஒரு பிளாக் என அறிமுகப்படுத்திக்கொண்டு நிறைய சிறுகதைகள் எழுத்தாளர்கள் வரிசையில் பிரிக்கப்பட்டுள்ளது.
நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என அறிமுகப்படுத்தும் அழியாச்சுடர்கள் தளமும் பிரபலமான அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.
தமிழ் தொகுப்புகள் தளமும் வகைவகையாக புத்தகங்களைப் பிரித்து எழுத்தாளர்களின் பெயர்களோடு பட்டியலிட்டுள்ளனர்.
சமையல், பயணக்கட்டுரை, கம்ப்யூட்டர், பகவத்கீதை, முல்லா கதைகள், பாட்டி வைத்தியம் என அத்தனையும் சுமார் எழுபதுக்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் ஒரே கோப்பில் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். இதில் save file to computer என்பதில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
செந்தில்வயல் தளத்தில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. அனைத்துமே உபயோகமான புத்தகங்கள் ஆகும். 
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலை ஓசை, பார்த்திபன் கனவு என மிகவும் பிரபலமான நாவல்கள் மற்றும் புத்தகங்களை டவுன்லோட் செய்ய தங்கம்பழனி தளத்தினை கிளிக் செய்யுங்கள்.
தமிழ்தேனி தளத்திலும் மிகவும் பிரபலாமன எழுத்தாளர்களின் புத்தகங்களின் இணைப்பு உள்ளது. இதைப்பயன்படுத்தி நீங்கள் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யலாம்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now