
இம்முறை
 ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் இலங்கை முஸ்லிம்களின் நலன்களைக் கருத்திற் 
கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்து அல்லது ஏழு விமானங்களை 
விஷேட சேவையில் ஈடுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. 
சிவில்
 விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்
 நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரதம அலுவலர் ஜி.பி. ஜயசேன ஆகியோருடன் 
நடாத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த இணக்கப்பாடு 
காணப்பட்டிருப்பதாக அரச ஹஜ் குழுவின் இணைத்தலைவரும், பதிலமைச்சருமான 
ஏ.ஆர்.எம். அப்துல் காதர் நேற்றுத் தெரிவித்தார்.


